'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்கும் புதிய படத்தை வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக புதுமுகம் நடிக்கிறார்.
டிக்கிலோனா படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் பீம் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.
கன்னடத்தில் அறிமுகமான ஷெரின் கான்ஞ்சனவாலா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழக்கு வந்தார். அதன்பிறகு சந்தானம் ஜோடியாக டிக்கிலோனா படத்தில் நடித்தார், தற்போது யோகிபாபுவுடன் சூ கீப்பர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.