தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
பாலிவுட்டில் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '12வது பெயில்'. விது வினோத் சோப்ரா இயக்கிய அந்தப் படத்தில் விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். ஓடிடி தளத்திலும் பின்னர் வெளியாகி அப்படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.
2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் விக்ராந்த். சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்துதான் கொஞ்சம் வயதானதும் ஓய்வு பெறுவார்கள். அது போல விக்ராந்த் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
“கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன் ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
70 வயதைக் கடந்த பின்பும், பேரன், பேத்திகள் எடுத்த பின்பும் இந்திய சினிமாவில் பலர் இன்னும் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் விக்ராந்த் மாசே தனது 37வது வயதில் ஓய்வு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.