'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ராம்யா கிருஷ்ணன் உலக குத்துச் சண்டை சேம்பியன் மைக் டைசன் நடித்துள்ள படம் லைகர். இந்த படத்தை புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர் தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 25ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் விஜய்தேவர கொண்டா சிரஞ்சீவி மற்றும் சல்மான்கானை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விஜய்தேவர கொண்டா மற்றும் இயக்குனர் புரி ஜெகன்னாத், தயாரிப்பாளர் சார்மி வந்து சிரஞ்சீயிடமும், சல்மான்கானிடமும் ஆசி பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது: தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் வட இந்திய சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் ஒரே படத்தில் நடிப்பது என்னை போன்ற அவர்களது ரசிகர்களுக்கு பெரிய விருந்து. அவர்கள் சேர்ந்து நடிக்கும் அபூர்வ காட்சியை பார்த்துவிட்டு, அவர்களிடம் என் படத்தின் வெற்றிக்கு ஆசிர்வாதம் பெற்றது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. என்கிறார் விஜய் தேவரகொண்டா.