'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்திய அளவில் புகழ்பெற்ற விஆர்எல் குரூப்பின் நிறுவனர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் சங்கேஷ்வர். தற்போது இவரது வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதனை அவரது மகன் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிக்கிறார். படத்திற்கு விஜயானந்த் என்று டைட்டில் வைத்துள்ளனர். கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது.
ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சங்கரேஷ்வராக நிஹால் நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா, சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்கிறார். கோபிசுந்தர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஷ்வர் கூறியதாவது : இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம். என் தந்தையும் பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை சினிமா. 1976ல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒரு தன் வரலாற்றுப்படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை .