அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், சமந்தாவும் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்கள். அதையடுத்து அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்காத நிலையில், சமீபத்தில் ‛காபி வித் கரண்' சீசன் 7வது நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார் சமந்தா. திருமண வாழ்க்கை குறித்து அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அந்த குழப்பமான காலகட்டத்தில் இருந்து தான் வெளியே வந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட நாகசைதன்யா, அமீர் கானுடன் இணைந்து தான் நடித்துள்ள லால்சிங் சத்தா படம் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அப்போது அவரிடத்தில் சமந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ‛‛நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகப்படியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை'' என்று சமந்தா குறித்த கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாகசைதன்யா .