'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திரைப்பட இயக்குநர் கஸ்துரிராஜா, அவர் மனைவி விஜயலக்ஷ்மி ஆகிய இருவருக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நேற்று முன்தினம் சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ் வீட்டில் கஸ்துரிராஜா 70 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கஸ்துரிராஜாவின் மகன்கள் தனுஷ், செல்வராகவன் மற்றும் இரு மகள்கள், தயாரிப்பாளர் தாணு மற்றும் தனுஷின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து மாலைகள் மாற்றிக் கொண்டனர்; சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இறுதியாக ஏராளமானோருக்கு அன்னதானம் செய்தபின் விடைபெற்றனர்.