படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
ஜேடி- ஜெர்ரி இயக்கி உள்ள தி லெஜன்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் ஜவுளிக்கடை அதிபர் சரவணன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுட்டாலா என்ற பாலிவுட் நடிகை நடித்திருக்கிறார். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சென்று படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சரவணன்.
கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூப்பர் ஹீரோ கதைகளில் நடிப்பீர்களா? என்று நிருபர்கள் அவரைக் கேட்டபோது, கண்டிப்பாக நடிப்பேன். எனது அடுத்த படமே சூப்பர் ஹீரோ கதையில் தான் உருவாகிறது. அந்த படத்தை சர்வதேச அளவில் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது முதல் படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ள சரவணன், அடுத்த படத்தை சர்வதேச அளவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.