சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
பாலிவு நடிகர் ரன்வீர் சிங் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே கணவரின் நிர்வாணத்தை புகழ்ந்தார், ஆனால் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். வட நாட்டில் பல இடங்களில் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டமும் நடந்த வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்தூரை சேர்ந்த இன்னொரு தொண்டு நிறுவனமான'நேகி கீ திவார்' ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத ஆடைகளை போடுவதற்கு டொனேஷன் பாக்சையும் திறந்திருக்கிறது.