கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' |

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான திஷா பதானி, தற்போது தனது காதலரை பிரிந்து விட்டதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது திஷா பதானியும், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கிடையே லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திஷா பதானி கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு டைகர் ஷெராப் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அவரை திஷா பதானி பிரேக் அப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. பாலிவுட் மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகி உள்ள இந்த செய்திக்கு அவர்கள் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.