சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். தற்போது அஜித்தின் 61வது படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் ஒரு படத்தில் போனிகபூர் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக மும்பை அந்தேரி பகுதியில் ஒரு பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வந்ததை அடுத்து ரிகர்சல் நடைபெற்றது. அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் மின் கசிவு ஏற்பட்டதால் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் படக்குழுவுக்கு ரூபாய் 50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று ரன்பீர் கபூரும், ஷ்ரத்தா கபூரும் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது.