பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் |

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாகவே சில சங்கங்கள் தொடர்ந்து தங்களுக்குள் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. கொரோனா கால கட்டத்திற்குப் பின்பு தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்துவிட்டது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், தெலுங்கு திரைப்பட சேம்பர் ஓடிடி நிறுவனங்களுக்கு படங்களை அளிக்கும் கால அளவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது.
பல தியேட்டர்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மூடப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். பொய்யான வசூல் விவரங்களைக் காட்டி சில முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் ஆந்திரா தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு வருமான நிலையும், விலைவாசி உயர்வும், ஒரு திரைப்பட படைப்பாளர்களாக நாம் சந்திக்கும் பிரச்னைகளை தயாரிப்பாளர்களாக ஆலோசிக்க வேண்டியது முக்கியமானது. நமது படங்களை ஆரோக்கியமான சூழ்நிலையில் நாம் வெளியிடுவதைப் பற்றி உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதனால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு, வேலை செய்வதற்கான தீர்மானங்களைப் பற்றி உட்கார்ந்து விவாதிக்க வேண்டுமென கில்டு மெம்பர்கள் முடிவு செய்துள்ளார்கள்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தற்போது நடித்து வரும் படங்கள் ஐதராபாத்தில்தான் அதிகமாகப் படமாகி வருகிறது. விஜய், தனுஷ் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயம் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்', அஜித்தின் 61வது படங்களின் படப்பிடிப்பு அங்கு நடைபெறுவதற்கு சிக்கல் எழுந்துள்ளது.