மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம் | மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள் | தொடர் தோல்விகளால் தடுமாறும் நயன்தாரா | ராஷ்மிகாவால் 'புஷ்பா 2'க்கு கூடும் மவுசு |
கதாநாயகி வாய்ப்புகள் குறைந்ததால் அடுத்த ரவுண்டை தொடங்கி இருக்கிறார் அஞ்சலி. இதில், வித்தியாசமான கேரக்டர்கள் மட்டுமின்றி குத்து பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார். அந்த வகையில் தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி தெலுங்கில் நிதின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியது போன்று ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மேலும் அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்டு வரும் அஞ்சலி, தற்போது வெயிட் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அஞ்சலி, அங்கிருந்தபடியே தனது க்யூட்டான ஸ்லிம் போட்டோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்.