'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் |
மும்பை : ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். கடந்த 2018ல் நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்தார். இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். படங்கள் மட்டுமின்றி விளம்பரம், மாடலிங்கும் செய்து வருகிறார் ரன்வீர் சிங். கடந்தவாரம் ஆங்கில மேகஸின் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ரன்வீரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் அந்த போட்டோக்களை பகிர்ந்து நிறைய மீம்ஸ்களை வெளியிட்டனர்.
அதேசமயம் ரன்வீர் சிங் இந்த செயலை பெருமைப்படுத்தி பேசினார். 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என்றார்.
வழக்கு பதிவு
இந்நிலையில் ரன்வீர் தனது நிர்வாண போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : ‛‛ரன்வீர் சிங் நிர்வாண போட்டோவை வெளியிட்டு பெண்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். பேச்சு, கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்காக சமூகத்தில் நிர்வாணமாக உலவ வேண்டும் என்று அர்த்தமில்லை. நடிகர்களை கடவுள் போன்று சிலர் வணங்குகிறார்கள். அவர்களை பின்பற்றியும் வருகிறார்கள். ரன்வீர் சிங் இதுபோன்று மலிவான விளம்பரத்தை பெற முயற்சிக்கிறார்'' என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.