அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சந்திரமுகி. அந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழிந்து நிலையில் தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இதில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர மற்ற எல்லாமே இந்த இரண்டாம் பாகத்துக்கு புதியவர்கள் தான்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் என்பதும் தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அவர் நடித்து வருகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.