டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சிவ ராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்த மாதம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அப்படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு டெஸ்ட் சூட் நடத்தியுள்ளார். இதில் ரஜினி மற்றும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டு நடித்துள்ளார்கள். ஆகஸ்டு மாதத்திற்கு முன்பே இந்த கிளிப்ம்ஸ் வீடியோவை வெளியிட இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.




