இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலையும், லாபத்தையும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை என்பது உண்மை. 'டி பிளாக், ராக்கெட்ரி, யானை' ஆகியவை மட்டும் மிகச் சுமாரான வசூலைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் ஒரு வாரம் கூட முழுதாகத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.
வாரா வாராம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அடுத்து என்ன பெரிய படம் வரும் என தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. அவற்றின் வியாபாரங்களும் மிகவும் மந்தமாக இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படம் இரண்டு, மூன்று நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.