இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? |
தற்போதைய சினிமா சூழலில் புதிய வில்லன்களின் வரவு குறைவாகவே இருப்பதால் ஏற்கனவே ஹீரோவாக நடித்த சில நடிகர்களையே வில்லன்களாக மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. அப்படித்தான் விஜய் சேதுபதி வில்லனாக மாறி நடித்து வருகிறார். அதேபோல ஹீரோவாக நடித்து வந்த நடிகர் வினய்க்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்தார். அதைத்தொடர்ந்து டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் ஹைடெக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படங்களின் வெற்றியால் தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.
தற்போது மலையாளத்திலும் மம்முட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நடிகர் வினய். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் 12 வருடங்களுக்கு பிறகு மம்முட்டியை வைத்து மீண்டும் இயக்கும் படம் இது. அதுமட்டுமல்ல தமிழில் ஹீரோவாக வலம் வரும் விஷாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வில்லன் என்கிற படத்தில் வில்லனாகவே அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தவர் இந்த இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.