'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழ்த் திரையுலகில் இன்றுள்ள பல நடிகர்களுக்கும் என்றாவது ஒரு நாள் நாமும் சூப்பர் ஸ்டார் ஆவோம் என்ற கனவுதான் நிறைய இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் போன்று தன்னிச்சையாக வளர்ந்து ஒரு உயரிய இடத்தை அடைந்த நடிகர் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை, இனியும் வருவார்களா என்பது சந்தேகமே.
ரஜினி மாதிரி ஆகிறோமோ இல்லையோ அவருடைய படத் தலைப்பையாவது வைத்துக் கொள்வோமே என பலருக்கும் அந்த ஆசை வந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறை அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது. ரஜினிகாந்த் படத் தலைப்பான 'வேலைக்காரன்' படத்தை இதற்கு முன்பு தன் படத்திற்காக வைத்தவர் அடுத்து 'மாவீரன்' படத்தலைப்பை வைத்திருக்கிறார். ரஜினி படத் தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டதில் இது 23வது முறை.
ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' தோல்வியைத் தழுவியது. ரஜினி நடித்த 'மாவீரன்' தோல்வியடைந்தது. சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' என்ன ஆகும் என வெளிவந்தால்தான் தெரியும்.
இதற்கு முன்பு, “வீரா, தர்மதுரை, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், மனிதன், வேலைக்காரன், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, தங்கமகன், ரங்கா, போக்கிரி ராஜா, நெற்றிக்கண், கழுகு, பொல்லாதவன், காளி, நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா,” ஆகிய படத் தலைப்புகள் வெவ்வேறு நடிகர்களின் படங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள.
“கர்ஜனை, விடுதலை, துடிக்கும் கரங்கள், ஆயிரம் ஜென்மங்கள்,” படத் தலைப்புகளை வைத்துள்ள படங்கள் இனிமேல்தான் வெளியாக வேண்டும்.