விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் ஆகும் காலம், அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நிரூப். பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்ட இவர் தற்போது ரெயின்போ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார்.
வசந்த் ராமசாமியின் ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ் சார்பில் வசந்த் ராமசாமி மற்றும் இயக்குனர் எஸ்.பி.ஹோசிமினின் ஹோசிமின் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ரெயின்போ. ஹோசிமினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் கைபா பட்டாபிராம் இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நிரூப் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் சிம்ரான் ராஜ் உள்ளிட்ட 7 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மற்ற ஹீரோயின்கள் முடிவாகவில்லை. இவர்களுடன் மைம் கோபி , மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் ஆனந்த் இசை அமைக்கிறார். இது பேண்டசி படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.