புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து ஐந்து வாரங்கள் முடிந்து ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிவிட்டது.
இருப்பினும் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏற்கெனவே மொத்தமாக 400 கோடி வசூலைப் பெற்றுள்ள 'விக்ரம்' படம் இன்னும் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை தியேட்டர்களில் ஓட வாய்ப்பிருக்கிறது.
விஜய், அஜித் இருவர்தான் பாக்ஸ் ஆபீஸில் இப்போது அதிக வசூலைப் பெறுபவர்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சீனியர் நடிகரான கமல்ஹாசன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். தமிழில் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வசூலைக் கடக்குமா என்பது படம் ஓடி முடிக்கும் போதுதான் தெரியும்.