திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா | சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் |
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் சமந்தா. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலியும் தெலுங்கில் நிதின் நாயகனாக நடித்து வரும் ‛மச்சேர்லா நியோஜெகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலில் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியது போன்ற காஸ்ட்டியூமில் தோன்றுகிறார் அஞ்சலி. அதுகுறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும் நிசப்தம் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் 15வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, ஜான்சி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதையடுத்து தொடர்ந்து பாடல்களுக்கு நடனமாட தான் தயாராக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார் அஞ்சலி.