சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை பொல்லாதவன்', 'ஜிகர்த்ண்டா' போன்ற திரைப்படங்களை தயாரித்த 'பைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கி வருகிறார். இவரின் முதல் இயக்கம் இதுவாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இவர்களுடன் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில்கொண்டு டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ருத்ரன் படத்தை முடித்த பிறகு அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் லாரன்ஸ் நடிக்கிறார்.