ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை |
இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. 'செங்கடல், மாடத்தி' ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்கி, காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா மணிமேகலை.
அதில் 'காளி' தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டுவிட்டர் தளத்தில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து, லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இது குறித்து லீனா மணி மேகலை, “ஒரு மாலைப் பொழுது, டோரோண்டோ மாநகரத்தில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும் போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai'' ஹேஷ்டேக் போடாம “love you leena manikemalai'' ஹேஷ்டேக் போடுவாங்க,” என தெரிவித்துள்ளார்.
புகார்
ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தேவியை இழிவுப்படுத்தி புகைபிடிப்பது போல படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.
டில்லியில் வழக்கு பதிவு
இதேப்போன்று டில்லியிலும் லீனா மணிமேகலைக்கு எதிராக இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளத. இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.