‛லால் சிங் சத்தா' படத்திற்கு எதிராக எழுந்த குரல் : வருத்தம் தெரிவித்த ஆமீர்கான் | திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா | சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் |
பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வது அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கிறது. இளையராஜாவின் பல பாடல்களை பல இசையமைப்பாளர்கள் ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் தன் தந்தை இளையராஜா இசையமைத்த பாடல்களை தொடர்ந்து அவர் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்தி வருகிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, டிடி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛காபி வித் காதல்'. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சுந்தர் சி இயக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
காதல், காமெடி கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடலான ‛ரம் பம் பம்' என்ற பாடலை இன்று மாலை வெளியிடுகின்றனர். இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இளையராஜா இசையமைத்த ‛மைக்கேல் மதன காமராசன்' படத்தில் இடம் பெற்ற ‛ரம் பம் பம் ஆரம்பம்...' பாடல் தான் இது.
கமல் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான மைக்கேல் மதன காமராசன் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‛பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' என்ற பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்திற்காக பயன்படுத்தினார் யுவன். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே பாணியில் இப்போது இதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு ஹிட் பாடலான ரம் பம் பம் ஆரம்பம்... என்ற பாடலையும் சுந்தர் சி படத்திற்காக அப்பா இளையராஜா அனுமதி உடன் பயன்படுத்தி உள்ளார் யுவன். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.