ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்.
இந்த மகேஷ் நாராயணன் கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் சீ யூ சூன், மாலிக் ஆகிய படங்களையும் இயக்கியவர். விக்ரம் படம் போல இந்தப் படத்திலும் கமலுக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் விக்ரம் படம் வெளியீட்டுக்கு முன்பாக கேரளாவில் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது கூட, நானும் மம்முட்டியும் இணைந்து நடிப்பது பல வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.