டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே'. முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா சார்ல்டன், திரவியம் ராஜ்குமரன், சித்தார்த் குமரன், ஸ்வாதி கோண்டே ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தம்பியும் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி குழப்பத்துடன் ஆரம்பித்துள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரளவு வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், இரண்டாவது ஜோடியாக நடித்து வரும் திரவியம் - ஸ்வாதி ஜோடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்நிலையில், திரவியம் மற்றும் ஸ்வாதி ஜோடியாக போட்டோஷூட் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வர, ரசிகர்கள் 'ஆன் ஸ்கீரினில் மட்டுமல்ல ஆப் ஸ்கிரீனிலும் இது சூப்பர் ஜோடி' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.