கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 28) இரவு உயிரிழந்தார். இன்று மதியம் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. ரஜினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்
‛‛நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி ஐபிஎஸ், வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஓட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்.
சரத்குமார்
தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா அவர்களும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும். அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
குஷ்பு
ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.