ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த 2015ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் பிக்கெட் 43'. ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் தொடர்ந்து ராணுவ படங்களாக இயக்கி வரும் இயக்குனர் மேஜர் ரவி இயக்கத்தில் இந்த படம் வெளியானது. வழக்கமான ராணுவ படங்களில் இருந்து மாறுபட்டு எல்லையை பாதுகாக்கும் ஒரு இந்திய ராணுவ வீரனுக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரனுக்கும் ஏற்படும் உணர்வுப்பூர்வமான நட்பையும் இந்த இரண்டு வீரர்களுமே பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என தங்கள் உயிரை கொடுத்து போராடுவதையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது. அதனாலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் இந்த படம் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தை தற்போது மீண்டும் எதேச்சையாக பார்த்துள்ளார். இதை பார்த்தவுடன் தனது நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் மேஜர் ரவிக்கு சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அதில், "என்ன ஒரு அருமையான படம். மேஜர் ரவி சார் இதேபோன்று இன்னொரு படம் பண்ணுங்கள். நான் வேண்டுமென்றால் பிரித்விராஜிடம் சொல்லி இப்படி ஒரு படம் இயக்குமாறு உங்களிடம் கோரிக்கை வைக்க சொல்லவா ? என்று கேட்டுள்ளார். பொதுவாக ரசிகர்கள் ஒரு படத்தின் இயக்குனருக்கு இதுபோன்று கோரிக்கை வைப்பதை தாண்டி ஒரு இயக்குனரான அல்போன்ஸ் புத்ரனே இப்படி ஒரு இயக்குனருக்கு கோரிக்கை வைத்து இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.