கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் மஞ்சரி. கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கடந்த 2005-ல் மலையாளத்தில் இளையராஜா இசையமைத்த அச்சுவின்டே அம்மா என்கிற படத்தில் பாடகியாக அறிமுகமானவர். இந்த நிலையில் இவர் தனது பள்ளிக்கால தோழன் ஜெரின் என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மஸ்கட்டில் பள்ளியில் படித்த காலத்திலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள்.
அதேசமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சரிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று பின்னர் சில வருடங்களிலேயே முதல் கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்று விட்டார். இந்த நிலையில்தான் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மஞ்சரி. திருமணம் முடித்த கையோடு மேஜிக் அகாடமி என்கிற இல்லத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் சென்று தங்களது திருமண நிகழ்வை கொண்டாடி அவர்களுடனேயே மதிய விருந்தும் அருந்தியுள்ளனர் இந்த புதுமண தம்பதியினர்.