சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தி வாரியர்'. ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய கதாபத்திரங்களில் ஆதி, நாசர், நதியா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஜூலை 14-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான புல்லட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து தட தட என்ற பாடல் வெளியானது. தற்போது படத்தின் மூன்றாம் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விசில் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். அந்தோணிதாசன், ஸ்ரீனிஷா பாடி உள்ளனர். புல்லட் பாடல் போன்று இந்த பாடலும் வைரலாகி வருகிறது.