படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

அமராவதி கிரியேஷன்ஸ் சார்பில் ராம்கோவிந்த் தயாரிக்கும் படம் காத்திருந்தேன். புதுமுகம் சுரேஷ் பாரதி இயக்கி நடிக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக இளங்கோவன் நடிக்கிறார். சுஷ்மிதா நாயகியாக நடிக்கிறார். ரா.முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.பி.விஜய் இசையமைக்கிறார்.
படம் குறித்து சுரேஷ் பாரதி கூறியதாவது: முறையான காதல், கள்ளக்காதல், நல்ல காதல், என காதலில் பலவகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட காதலை சொல்ல உள்ளேன். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப்படாத காதல் கதை இது.
காதலிக்கும் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. சாதி, மதம், பணம், அரசியல் எதுவும் காரணம் இல்லை. வேறு எதற்காக இவர்கள் கேரக்கூடாது என்பதை சஸ்பென்சாக இதுவரை யாரும் சொல்லப்படாத புதிய பரிணாமத்தோடு சொல்வதற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். கோவை, சேலம், கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படமாக்கிறது. என்றார்.