2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து 'டாய் ஸ்டோரி' வரிசை அனிமேஷன் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வகை படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்தப் படங்களில் இடம்பெற்ற முக்கியமான கேரக்டர் பஸ் லைட்இயர். தற்போது இந்த கேரக்டரை மையப்படுத்தி லைட் இயர் படம் வெளியாகி உள்ளது. இதனை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் நேற்று இந்த படம் வெளியானது. இந்த நிலையில் அரபு நாடுகள், எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, லெபனான் உள்ளிட்ட 14 நாடுகள் தடைவிதித்துள்ளது.
இதற்கு காரணம் படத்தில் வரும் ஹீரோ இரு பெண்களை திருமணம் செய்து கொண்டவராக இருக்கிறார். லிப் லாக் முத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதோடு தன்பாலின முத்தக்காட்சிகளும் இடம் பெற்றதுள்ளது. இது குழந்தைகள் பார்க்கும் படம் என்பதால் இந்த காட்சிகள் அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக சம்பந்தபட்ட நாடுகள் விளக்கம் அளித்துள்ளன.