குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் ‛‛காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி ஏற்றி சென்ற முஸ்லீம் நபர் கொல்லப்படுவதும் இரண்டுமே மத வன்முறை தான். மதங்களை கடந்து மனிதர்களாய் இருப்போம்'' என கூறினார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ஜதராபாத்தில் இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛சாய் பல்லவியை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். பெண்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா. நல்ல மனிதனாக இருங்கள் சொன்னால் உடனே தேச விரோதி என முத்திரை குத்துகிறார்கள். வெறுப்பை உமிழ்பவர்களை ஹீரோக்கள் என்கிறார்கள். எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.