5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பதினாறு, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மது ஷாலினி. கடைசியாக ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் படத்தில் நடித்தார். தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கோகுல், ‛‛சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். நேற்று(ஜூன் 16) ஐதராபாத்தில் எளிய முறையில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
‛‛வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை எடுத்து வைத்துள்ளோம். உங்கள் அனைவரின் அன்புக்கு எங்களின் நன்றி'' என்கிறார் மது ஷாலினி.