ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் விஜய்யுடன் நடித்த பீஸ்ட் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் பூஜாவின் மார்க்கெட் டல் அடிக்க போகிறது என்று கருதப்பட்டு வந்த நிலையில், பூரி ஜென்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன என்ற படத்தில் கமிட்டான பூஜா ஹெக்டே, அதையடுத்து இப்போது கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் மூலம் முதன் முறையாக அவருக்கு ஜோடியாகி இருக்கிறார் பூஜா ஹெக்டே. மேலும், யஷ் 19 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை நார்தன் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை இயக்கியவர். இப்படம் தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.