சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காஞ்சனாவின் வெற்றிக்குப் பிறகு "லாரன்ஸ்" இயக்கும் "முனி-3"யிலும் லாரன்ஸ், லட்சுமிராய் ஜோடிதான் நடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் இப்போது "முனி-3"யில் டாப்ஸி ஹீரோயினாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து லட்சுமிராய் அளித்துள்ள விளக்கம்: "முனி-3"யில் நான்தான் நடிப்பேன் என்று நானோ; இல்லை அவரோ (லாரன்ஸ்) எங்கேயும் சொன்னதில்லை. இது மீடியாக்கள் செய்து கொண்ட கற்பனை. ஒரு படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைப்பது என்று அந்தப் படத்தின் இயக்குனர்தான் தீர்மானிப்பார். அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. முனி-3 கதைக்கு என்னைவிட டாப்ஸிதான் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கருதியிருக்கலாம். எந்த இயக்குனரிடமும் நான் வலியச் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. இனியும் கேட்க மாட்டேன்.
முனி-3யில் நான்தான் ஹீரோயின் என்று மீடியாக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்ததால் என் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகி விட்டது. அவர்கள் வருத்தப்பட்டு எனக்கு மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை சமாதானப்டுத்த வேண்டியதாகிவிட்டது. அதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.