இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

உலகளவில் பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாப் இசை உலகில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் பாடகர் ஜஸ்டின் பீபர். இந்நிலையில் ஸ்டின் பீபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொகுறித்து ஜஸ்டின் பீபர் வெளியிட்டுள்ள விடீயோவில், தான் ராம்சே ஹன்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தனது முக நரம்புகளை தாக்கி ஒற்றைப் பக்க தசைகளை செயலிழக்க செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனது ஒற்றைப் பக்க காது மற்றும் முக தசைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருபக்கம் கண் இமைக்க முடியவில்லை , ஒரு பக்கத்தால் சிரிக்க முடியாது. சரியாகி விடுவேன் என உறுதியுடன் இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.