மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக நடிக்கிறார். சிறு வயதிலிருந்தே விஜய்யின் ரசிகையாக இருக்கும் ராஷ்மிகா நடிக்க வந்தது முதலே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பேட்டியில் விஜய் 66 படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். படத்தில் சுயநலமிக்க, தலைக்கனம் பிடித்த பெண்ணாக ராஷ்மிகா நடிக்கிறாராம். அக்கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான ஒன்றாக இருப்பதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வெளியாகி உள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். படப்பிடிப்பின் போது கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.