100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
கமல்ஹாசனுடன் சூர்யா இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே உலவி வருகிறது. கமலின் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்ததை தொடர்ந்து அது மேலும் உறுதியானது. இந்த நிலையில் சூர்யாவுடன் நடிக்க இருப்பதை கமல் உறுதி செய்துள்ளார். விக்ரம் படத்திற்கு பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல் வெளியிட்ட வீடியோவில் அதை உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவில், ‛‛விக்ரம் படத்தின் கடைசி மூன்று நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த எனது அருமை தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை, அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
இதன் மூலம் சூர்யா - கமல் இணையும் படம் உறுதியாகி உள்ளது. ஏற்கனவே விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிப்பார் என கமல் கூறினார். அனேகமாக கமலின் இந்த அறிவிப்பு விக்ரம் 3 படமாக இருக்கலாம் என்கிறார்கள்.