Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்தை இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ்?

07 ஜூன், 2022 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Is-Lokesh-going-to-direct-Rajini?

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுப்பது இந்தக் காலத்தில் சாதாரண விஷயமல்ல. அப்படி நான்கு படங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பையும், பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க கமல்ஹாசன் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தான் ஒரு படம் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அதன் பிறகுதான் கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்க லோகேஷ் இயக்க 'விக்ரம்' படத்தை ஆரம்பித்தனர்.

முன்னர் முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினர். அதன்பின் 'விக்ரம்' படத்தை வெகுவாகப் பாராட்டினார் ரஜினி என்ற செய்திகளும் வெளிவந்தன.

ரஜினிகாந்த் - லோகேஷ் இணைந்து ஒரு படம் செய்ய மாட்டார்களா என்று ரஜினிகாந்த் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அது நடக்கும் என்றே தெரிகிறது. விஜய் நடிக்கும் படத்தை இயக்கி முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. அதன் பிறகுதான் 'கைதி 2' படத்தை இயக்குவார் என்றும் சொல்கிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தை ரஜினிகாந்த் முடித்த பின் அவரது 170வது படமாக லோகேஷ் இயக்கும் படம் உருவாகலாம். அதற்குள் விஜய்யின் 67வது படத்தை லோகேஷும் இயக்கி முடித்துவிட்டு வந்துவிடுவாராம்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
‛ஜென்டில்மேன் 2' இயக்குனர் அறிவிப்பு‛ஜென்டில்மேன் 2' இயக்குனர் ... 'இந்தியன் 2' படத்தை 'டேக் ஓவர்' செய்யும் உதயநிதி ஸ்டாலின் 'இந்தியன் 2' படத்தை 'டேக் ஓவர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

rameshbabu - Chennai,இந்தியா
12 ஜூன், 2022 - 07:41 Report Abuse
rameshbabu ரஜினி சார் படம் கமர்ஷியல் பாணி எப்போதும் வெற்றிபெறும் ....ரஜினி படம் 200 கோடி கலக்ஷன்னா தோல்வினுசொல்வாங்க...கமல் படம் 100கோடி கலக்ஷன்னா கூட வெற்றினு சொல்வாங்க....ரஜினிசார்க்கு கமர்ஷியல் இயக்குனர் உடன் இருந்தால் போதும் வெற்றி பெறும் படம்
Rate this:
rameshbabu - Chennai,இந்தியா
12 ஜூன், 2022 - 07:38 Report Abuse
rameshbabu காணாமல் போன கமல் சார் ஏதோ லோகேஷ் கனகராஜ் சூர்யா விஜய் சேதுபதி போன்றோர்களின் இணைவால் கொஞ்சம் மறுவாழ்வு பெற்றுள்ளார்....இதை வைத்து கமல் கொஞ்சம் சேர்த்துக்கட்டும் ...ரஜினி சார்க்கு எந்த டைரக்டர்னாலும் கொஞ்சம் கமர்ஷியலா கொடுத்தா போதும் சூப்பர் ஹிட் ஆகிடும் ....
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
08 ஜூன், 2022 - 11:22 Report Abuse
KavikumarRam விக்ரம் படம் ஒரு மரண மொக்க. ரஜினியை ஏற்கனவே சாதியவாத ரஞ்சித் ரெண்டு படத்துல வச்சு செஞ்சிட்டான். இந்த இப்ப ஒருத்தன் வந்திருக்கான். பேசாம ரஜினியும் கமலும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்.இருக்கிற மணமாவது மிஞ்சும்.
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
08 ஜூன், 2022 - 10:17 Report Abuse
Mohan இனியும் இந்த குதிரை மேல பந்தயம் காட்டுறாங்க பாரு அதுதான் இருக்குறதலயே கேவலம் ...
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
08 ஜூன், 2022 - 10:15 Report Abuse
சொல்லின் செல்வன் போர் வரட்டும் பாத்துக்கலாம் அப்படின்னு டைட்டில் வைங்க
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in