ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரைப்பட பாடல்களுடன் பல பக்தி பாடல்கள் பாடியும் ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய அவரது பக்தி ஆல்பங்கள் மிகவும் புகழ்பெற்றவை கேசட் விற்பனையில் சாதனை படைத்தவை.
அந்த வரிசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பக்தி ஆல்பம் விஸ்ரூப தரிசனம். இது கிருஷ்ணரின் புகழ்பாடும் ஆல்பமாகும். குறிப்பாக மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபத்தை அடிப்படையாக கொண்ட பாடல்களால் இது நிறைந்தது பாடகர் ஸ்ரீஹரி தயாரித்துள்ளார். கே.எஸ்.ரகுநாதன் இசை அமைத்திருக்கிறார். சிம்பொனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீஹரி கூறியதாவது: இந்த ஆல்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். அவர் உடல்நலம் சரியில்லாமல் போவதற்கு முன்னால் திடீரென பாடலை கொடுங்கள் நான் பாடிக் கொடுக்கிறேன் என்றார். அப்போது நாங்கள் பாடலுக்கு இசை அமைத்திருக்கவில்லை. என்றாலும் அவர் பாடலை முதலில் பதிவு செய்து பின்னர் அதற்கு இசை அமைத்தோம்.
நான் மட்டும் அன்று அவர் பாடிய இந்தப் பாடலை பின்னணி இசை இல்லாமல் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் இன்று இந்தப் பாடலை நாம் இழந்திருப்போம். அவருடைய அற்புதமான, வசீகரமான. தெய்வீகமான இனிமையான மாயக்குரலை இந்த அற்புத படைப்பு இழந்திருக்கும். என்றார்.