தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள படம் 777 சார்லி. அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். கிரண்ராஜ் இயக்கி உள்ளார். ரக்ஷித் ஷெட்டியுடன் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி.ஷெட்டி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் வருகிற 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி மொழிகளில் வெளிவருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இதை முன்னிட்டு நடந்த படத்தின் அறிமுக விழாவில் ரக்ஷித் ஷெட்டி பேசியதாவது:
இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு. சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 18 மாதங்களுக்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்த படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது.
எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். என்றார்.