பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இந்திய கிரிக்கெட்டை உலக அளவில் வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றவை ஐபிஎல் போட்டிகள். 2008ல் ஆரம்பமான இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 15 வருடங்களாக வருடா வருடம் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
நாளை இந்த ஆண்டிற்கான இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
நாளை இறுதி ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். கடந்த 75 வருடங்களாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இந்திய கிரிக்கெட்டைப் பெருமைப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி அமைய உள்ளது என ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.