ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
1994ம் ஆண்டு மிஸ் உலக அழகி பட்டம் வென்றவர் ஐஸ்வர்யா ராய். அதன்பின் இந்திய மக்களை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். உலக அழகி பட்டம் வென்றவர் முதன் முதலில் ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகாமல் தமிழ் சினிமாவில்தான் அறிமுகமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1997ல் வெளிவந்த 'இருவர்' படம்தான் ஐஸ்வர்யா அறிமுகமான படம். அதன் பின் தமிழில் 'ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் ஹிந்திப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். தற்போது கேன்ஸ் பட விழாவில் தனது ரெட் கார்ப்பெட் போஸ்களில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா.
அவரது சொத்து மதிப்பு தற்போது 100 மில்லியன் யுஎஸ் டாலராக உள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 775 கோடி. ஐஸ்வர்யா தற்போது கணவரது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை ஜல்சா பங்களாவின் மதிப்பு 112 கோடி ரூபாய். துபாயில் ஜுமைரா கோல்ப் எஸ்டேட்டில் ஒரு வில்லா உள்ளது. இது மட்டுமல்லாமல் மும்பையில் பிகேசி காம்ப்ளக்சில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றும் உள்ளதாம்.
தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம் ஐஸ்வர்யா. அது மட்டுமல்ல பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அவற்றிற்கான சம்பளம் நாள் கணக்கில் மட்டுமே வாங்குவாராம். ஒரு நாளைக்கு ஐந்தாறு கோடிகள். இவ்வகையில் ஒரு வருடத்திற்கு சுமார் 100 கோடி வரை சம்பாதிக்கிறாராம்.
சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார், 1.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், 1.6 கோடி மதிப்புள்ள ஆடி கார், 2.3 கோடி மதிப்புள்ள லெக்சஸ் கார், 2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் என சில பல கார்களை வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
48 வயதானாலும் ஐஸ்வர்யா ராயின் அழகைப் பற்றி இன்றும் பேசாதவர்கள் கிடையாது. அவருக்கு ஆயிரக்கணக்கில் சொத்து இருந்தாலும் அவரது சொத்தே அவரது அழகுதான் என்பவர்களே அதிகம்.