நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

எம்எஸ் தோனி உட்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த பாரத் அனே நேனு படத்தை அடுத்து ராம்சரணுடன் விவிஆர் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கி வரும் படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வருகிறார். ஹிந்தியில் வருண் தவான் உடன் இணைந்து கியாரா அத்வானி நடித்துள்ள ஜக் ஜக் ஜியோ படம் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்த நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடத்தில், எப்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறீர்கள் என்று மீடியாக்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
அதற்கு, திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்பதில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே செட்டில் ஆகலாம். நான் இப்போது நன்றாக செட்டில் ஆகிவிட்டேன். நிறைய படங்களில் நடிக்கிறேன். நிறைய சம்பாதித்து சந்தோஷமாக இருக்கிறேன் என்று ஒரு பதில் கொடுத்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் லிவிங் டுகெதர் உறவில் கியாரா அத்வானி இருந்து வருவதாக பாலிவுட்டில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




