அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து சமீபத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. பல மொழிகள், கலாசாரங்கள், பண்டிகைகள், மதங்கள் என வண்ணமயமான நாடு இந்தியா. நாம் அனைவரும் இங்கு நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்ந்து வருகிறோம். நான் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். ஹிந்தி நமது தேசிய மொழி என நான் கருதுகிறேன். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் ஹிந்தி மொழி அதிகம் பேசப்பட்டும், புரிந்து கொள்ளப்பட்டும் வருகிறது. ஆனால் வேறு எந்த மொழியையும் அது கொண்டு போகவில்லை என தெரிவித்துள்ளார்.