குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
'கேஜிஎப் 2' படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் உயர்த்தியவர் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதியன்று வெளியானது.
'சலார்' படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கும், ஜுனியர் என்டிஆரின் 31வது பட அறிவிப்பு போஸ்டருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே ரவுடி கதைகள் போலத்தான் இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களின் டிசைன்களுமே வெளிப்படுத்துகின்றன. இரண்டு போஸ்டர்களிலும் படத்தின் ஹீரோக்கள் கருப்பு வெள்ளையில்தான் இடம் பெற்றுள்ளார்கள்.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரு 'ரா'வான படமாகத்தான் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். அது போன்றே 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' ஆகிய படங்கள் இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து தங்களது அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே மாதிரியான டிசைன், கதை இருந்தால் அது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். 1000 கோடி வசூலைக் கொடுத்த பிரசாந்த் நீலுக்கு இது புரிந்திருக்காதா என்ன?