ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரு படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகும் அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இது கொள்ளையடிப்பது குறித்த படம் எனவும், இதில் அஜித் வில்லனாக நடிப்பதாகவும், மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே பாகுபதி, கேஜிஎப்2 படங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் இணைந்துள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. இந்த பட்டியலில் தற்போது நடிகர் மகாநதி ஷங்கரும் இணைந்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துடன் தீனா படத்திலும் நடித்துள்ளார்.