ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்ற படம் 'மாநாடு'. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட்டும், சம்பளமும் உயர்ந்தது.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஏஆர் ரகுமான் இசை என்பது படத்திற்கு மற்றொரு பிளஸ் பாயின்ட். இப்படத்தின் வியாபாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம்.
டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக ஒரு தகவல். படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை , ஹிந்தி உரிமை 25 கோடிக்கும் விற்கப்பட்டுவிட்டதாம். இதன் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் அதில் பாதிதான் என்கிறார்கள். இந்த உரிமைகளிலேயே 25 கோடி லாபம் வந்துள்ளது. இன்னும் தியேட்டர்கள் உரிமைகளை விற்றால் அதில் ஒரு பெரும் தொகை கிடைக்கும்.
இவ்வளவுக்கும் காரணம் 'மாநாடு' படத்தின் வெற்றிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். 'மாநாடு' படத்தின் வெற்றியால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு இதுவரை வசூல் கணக்கை வினியோகஸ்தர்கள் தரவில்லை. அதே சமயம், அதன் வெற்றியால் சிம்புவின் அடுத்த வெளியீடான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதை ஆச்சரியமாகப் பார்க்கிறது கோலிவுட்.