மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் | கர்மா சும்மா விடாது : சமந்தா காதலரின் மனைவி சாபம் | பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் 'குஷி' | பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா | பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் | பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் |
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை- 28 படத்தில் அறிமுகமான விஜயலட்சுமி அதன் பிறகும் பல படங்களில் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பிக் பாஸ், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற விஜய லட்சுமி, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் அவர், சமீபத்தில் தான் நடனமாடிய வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தபோதும், ஒரு பெண்மணி, அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? என்று கமெண்ட் கொடுத்திருந்தார்.
இது விஜயலட்சுமிக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்து விட்டது. அதையடுத்து அந்த பெண்ணுக்கு அவர் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அதில், அம்மா ஆகிவிட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? வாழ்க்கை முடிந்துவிட்டது என்று குடும்பத்திற்காக தியாகி ஆகிவிட வேண்டுமா? எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையை நான் வாழ்வேன். நான் விரும்பிய ஆடைகளை அணிவேன் . எனக்கு தெரிந்த நடனங்களை ஆடுவேன். உங்களை போன்ற பெண்களால்தான் தாயான பெண்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நீங்கள் குத்துவிளக்காக இருக்கிறீர்கள் என்பதற்காக மற்றவர்களை பார்த்து பொறாமை கொண்டு கமெண்ட் செய்யாதீர்கள். உங்களது அட்வைஸ் கூந்தலை நீங்களே வைத்து அதில் பூ வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு காட்டமான பதிலடி கொடுக்கிறார் விஜயலட்சுமி. அவரது இந்த பதிலடிக்கு சோசியல் மீடியாவில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.